திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 26 மார்ச் 2018 (16:31 IST)

சிறுநீர் கழித்ததால், விபத்துக்குள்ளானவரை ஆம்புலன்ஸில் இருந்து கீழே தள்ளிய டிரைவர்...

கேரள மாநிலத்தில் விபத்துக்குள்ளான ஒருவர் ஆம்புலன்ஸில் சிறுநீர் கழித்ததாலு, வாந்தி எடுத்தாலும் ஆம்புலன்ஸ் டிரைவர் அவரை கீழே தள்ளிவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
விபத்தில் காயமடைந்த நடுத்தரவயது இளைஞர் ஒருவர் சாலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த பொதுமக்கள் ஆம்புலன்ஸுக்கு கால் செய்து அறிவித்துள்ளனர். 
 
சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் தனியார் மருத்துவமனைக்கு சென்ற போது சிகிச்சை மறுக்கப்பட்டதால், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 
 
அப்போது ஆம்புலன்ஸ் டிரைவர் காயம்பட்டவரை வாகனத்தில் இருந்து கீழே இறக்கமுற்பட்டபோது, அவர் ஆம்புலஸில் சிறுநீர் கழித்தும், வாந்தி எடுத்திருப்பதைப் பார்த்து ஆத்திரம் அடைந்தார். 

 
மருத்துவமனையின் ஊழியர்கள் ஸ்டிரெச்சர், வீல்சேர் கொண்டு வருவதற்குள், அந்த ஆம்புலன்ஸ் டிரைவர், உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை ஸ்டிரெச்சரோடு ஆம்புலன்சில் இருந்து கீழே தள்ளிவிட்டு பிரப்பட்டார். 
 
இதில், அந்த ஸ்டிரெச்சர் தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து கேரள மாநிலத்தில் உள்ள ஊடகங்களுக்கு அனுப்பினர். இந்நிலையில் அந்த நபர் மரணமடைந்துள்ளார். 
 
இதையடுத்து, மனிதநேயத்தோடு நடந்து கொள்ளாத அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.