புதிய தலைமைச்செயலக கட்டிடத்திற்கு அம்பேத்கர் பெயர்: முதல்வர் அறிவிப்பு
தெலங்கானா மாநிலத்தில் தற்போது புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டு வரும் நிலையில் அந்தக் கட்டிடத்திற்கு அம்பேத்கார் பெயர் சூட்டப்படும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் ரூ.500 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் தற்போது கட்டப்பட்டு வருகிறது. 2020 ஆம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கிய நிலையில் தற்போது கட்டிடம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் இந்த கட்டிடத்திற்கு சட்டமேதை அம்பேத்கர் பெயரை சூட்ட வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெலுங்கானா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அம்பேத்கார் பெயர் சூட்டுவதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது
இந்தநிலையில் தெலுங்கானாவில் உள்ள புதிய தலைமைச் செயலக கட்டிடத்திறு அம்பேத்கர் பெயர் சூட்டுவதாக அதிகாரப்பூர்வமாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் விரைவில் இந்த கட்டிடத்தின் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது