திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (09:58 IST)

7 பேர் உயிரை வாங்கிய எலெக்ட்ரிக் பைக்! பற்றி எரிந்த ஷோ ரூம்!

electric bike burn
தெலங்கானாவில் எலெக்ட்ரிக் பைக் ஷோ ரூமில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவின் செகந்திராபாத் பகுதியில் ரயில் நிலையம் அருகே எலெக்ட்ரிக் பைக் ஷோ ரூம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. வழக்கம்போல இரவு கடை மூடப்பட்டுள்ளது. கடைக்கும் மேல் உள்ள தளங்களில் சில குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் திடீரென ஷோ ரூமில் தீப்பற்றியுள்ளது. இதையறிந்த மக்கள் சிலர் தப்பி செல்ல முயன்றும் வழி இல்லாததால் தீ மேல்தளத்திற்கும் பரவியுள்ளது. இதனிடையே தீ பற்றிய விவகாரம் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர்.


எனினும் அதற்குள் 7 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பைக் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவே விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே பல இடங்களில் மின்சார பைக்குகள் திடீரென தீப்பற்றிய சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்று ஷோ ரூமே பற்றி எரிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.