1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 27 ஜனவரி 2019 (08:43 IST)

கங்கையில் புனித நீராடிய பின் தீவிர அரசியல்: பிரியங்கா காந்தி முடிவு

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐந்து மாநில தேர்தலில் மூன்று பெரிய மாநிலங்களில் ஆட்சியை பிடித்தபோதிலும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க பல மாநில கட்சிகள் தயக்கம் காட்டி வருகின்றன. அதேபோல் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் தவிர இன்னும் ஒரு அரசியல் கட்சி தலைவர் கூட ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க கடைசி அஸ்திரமான பிரியங்கா காந்தியை காங்கிரஸ் களமிறக்கியுள்ளது. உபி மாநிலத்தின் முக்கிய நிர்வாக பதவியை பிரியங்காவுக்கு ராகுல்காந்தி கொடுத்துள்ளதால் அக்கட்சி தொண்டர்களிடையே உற்சாகம் ஏற்பட்டுள்ளது. உபி மாநிலம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இவரை பிரச்சாரத்திற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
 
இந்த நிலையில் தனக்கு அளிக்கப்பட்ட உத்தரப் பிரதேச கிழக்கு மாநில பொதுச் செயலாளர் பதவியில் விரைவில் பொறுப்பேற்கவுள்ள பிரியங்கா காந்தி, அதற்கு முன் கங்கையில் புனிதா நீராடாவுள்ளதாகவும், அதன்பின்னர் தீவிர அரசியலில் குதிக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். பிரியங்காவுடன் ராகுல்காந்தியும் கங்கையில் புனித நீராடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பாஜகவின் கோட்டை என்று கருதப்படும் உத்தரப்பிரதேசத்தில் இந்து வாக்காளர்களைக் கவர்வதற்காகவே ராகுலும் பிரியங்காவும் கங்கையில் நீராட இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்