வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 24 ஜனவரி 2019 (06:34 IST)

பிரியங்கா காந்தி பிரதமர் வேட்பாளரா? காங்கிரஸ் வியூகத்தால் 3வது அணி அதிர்ச்சி

உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாயாவதி மற்றும் அகிலேஷ் கட்சிகள் மட்டும் கூட்டணி வைத்தது. இதனால் காங்கிரஸ் தனித்துவிடப்பட்டதால் அக்கட்சி உபியில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றே கணிக்கப்பட்டது.

ஆனால் பிரியங்கா காந்தி என்ற கடைசி அஸ்திரத்தை காங்கிரஸ் தற்போது பயன்படுத்தியுள்ளதால் உபியில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மேலும் உபியில் 80 தொகுதிகளிலும் தனித்து போட்டி என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் தேர்தலின்போது சோனியா காந்தியின் 'ரேபேலி' தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்றும், அதுமட்டுமின்றி உபி முழுவதும் அவர் சூறாவளி பிரச்சாரம் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள தயங்கும் கட்சிகள் கூட பிரியங்கா பிரதமர் வேட்பாளரானால் ஆதரிக்கும் என்றும் கணிக்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் இந்த அதிரடியால் நாடு முழுவதும் மோடியா? பிரியங்காவா? என்ற அலை தோன்றும் என எதிர்பார்க்கப்படுவதால் 3வது அணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.