Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

லாலுவின் ஆட்கள் மிரட்டுவதாக நீதிபதி திடுக்கிடும் புகார்: இன்று தண்டனை விபரம்

Last Modified வெள்ளி, 5 ஜனவரி 2018 (05:01 IST)
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் அவர்களுக்கான தண்டனை விபரம் நேற்றே அறிவிக்கவிருந்த நிலையில் இன்று திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தண்டனை அறிவிக்கவிருக்கும் தனக்கு லாலுவின் ஆட்களிடம் இருந்து மிரட்டல் வருவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்

லாலுவின் ஆட்கள் தமக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுப்பதாக கூறிய நீதிபதி சிவ்பால் சிங், தன்னை மிரட்டிய நபரின் பெயரையும் அவர் பேசியது என்ன என்பதையும் கூற மறுத்துவிட்டார். ஆனாலும் இந்த மிரட்டலுக்கு பயப்படாமல் சட்டத்தின் படியே தான் நடந்து கொள்வதாகவும் நீதிபதி சிவ்பால் சிங் தெரிவித்துள்ளார்.

இன்று லாலுவுக்கு தண்டனை அறிவிக்கப்படவுள்ள நிலையில் நீதிபதியே தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக வெளிப்படையாக கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்று காலை தண்டனை விபரத்தை நீதிபதி அறிவிக்கவுள்ளதால் நீதிமன்ற வளாகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :