கடன் சிக்கலில் அதானி குழுமம் மாட்டும்: பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை!
அதானி குழுமம் பல ஆயிரம் கோடி கடன் வாங்கி தனது தொழிலை விரிவாக்கம் செய்து வருவதாகவும் கடனை திரும்பக் கொடுக்க முடியாவிட்டால் பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தியாவின் முன்னணி தொழில் அதிபரான அதானி பல ஆயிரம் கோடி கடன் வாங்கி தனது தொழிலை விரிவாக்கம் செய்து வருகிறார்
இந்த நிலையில் இதுகுறித்து பொருளாதார நிபுணர்கள் கருத்து கூறுகையில் தன் சொந்த பணத்தை பயன்படுத்தாமல் பல ஆயிரம் கோடி கடன் பெற்று தொழிலை உருவாக்கி வருகிறார் என்றும் கடன் அளவை குறைக்காவிட்டால் பல்லாயிரம் கோடி வங்கிக் கடனை தர முடியாத சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடும் என்றும் எச்சரித்து உள்ளனர்
ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து வங்கிகளில் கடன் வாங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது