NDTV செய்தி நிறுவனத்தின் 29.1% பங்குகளை கைப்பற்றியது அதானி குழுமம்!
இந்தியாவின் முன்னணி தொழில் அதிபரான அதானி குழுமம் பல நிறுவனங்களை விலைக்கு வாங்கி வருகிறது என்பது குறித்து பார்த்து வருகிறோம்
இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு நிறுவனங் களையும் வாங்கி வருகிறது என்பதும் குறிப்பாக இலங்கையில் அதானி நிறுவனம் கால்பதிக்க திட்டமிட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்திய செய்தி ஊடகத்தின் முன்னணி நிறுவனமான என்டிடிவி செய்தி நிறுவனத்தின் 29.1 சதவீத பங்குகளை அதானி குழுமம் வாங்கியுள்ளது
மேலும் 26 சதவீத பங்குகளை ஒரு பங்குக்கு ரூபாய் 294 என்ற விலையில் வாங்கிக் கொள்வதாகவும் அதானி குழுமம் அறிவித்துள்ளது
இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனத்தின் பங்குகளை அதானி குழுமம் வாங்கியுள்ளதால் ஊடகத்துறையிலும் அந்நிறுவனம் கால்பதித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது