செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 16 மே 2024 (18:25 IST)

ஆம் ஆத்மி பெண் எம்பி தாக்கப்பட்ட விவகாரம்..! கெஜ்ரிவாலின் உதவியாளருக்கு சம்மன்!

Swati Maliwal
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாருக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
 
டெல்லி முதல்வர் அர்விந்த்  கெஜ்ரிவால் வீட்டில் வைத்து அவரது உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஸ்வாதி மலிவால் கடந்த மே 13ம் தேதி காலை டெல்லி போலீசாரிடம் புகார் அளித்தார்.  
 
இதுகுறித்து மவுனம் காத்துவந்த ஆம் ஆத்மி கட்சி பின்னர் ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்டது உண்மைதான் எனவும், இந்த விவகாரம் குறித்து அர்விந்த் கெஜ்ரிவால் கடுமையான நடவடிக்கை எடுப்பார் எனவும் விளக்கமளித்தது.


இந்நிலையில் இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ள தேசிய மகளிர் ஆணையம், மே 17ம் தேதி காலை 11 மணிக்கு பிபவ் குமாரை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.