வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : சனி, 11 மே 2024 (08:26 IST)

பாஜக முன்னாள் மாவட்ட நிர்வாகி தாக்குதல்: 9 பேரை தேடி வரும் போலீசார்..!

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் பாஜக முன்னாள் மாவட்ட நிர்வாகியை தாக்கிய மற்றொரு பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்ட நிலையில் பாஜக பொதுச் செயலாளர் செந்திலரசன் உள்ளிட்ட 9 பேரை போலீசார் தேடி வருகின்றனர் என்று செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த 3 நாட்களுக்கு முன் பாஜக மாவட்ட விவசாய பிரிவு முன்னாள் தலைவர் மதுசூதனன் மீது மர்ம கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் தொடர்பான புகாரில் பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர், பொதுச் செயலாளர் செந்திலரசன் உள்ளிட்டோரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் தாக்குதல் வழக்கில் பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர், கும்பகோணத்தை சேர்ந்த சரவணன், ஜெகதீசன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் தாக்குதல் சம்பவம் நடந்த பகுதியில் சிசிடிவி காட்சிகளின் பதிவுகளை காவல்துறையினர் சோதனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மதுசூதனன் தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரிடமும் காவல்துறையினர் விசாரணை செய்ததாகவும் தெரிகிறது.

Edited by Siva