நெஞ்சம் மறப்பதில்லை' ரிலீஸ் தேதி அறிவிப்பு


sivalingam| Last Modified வெள்ளி, 16 ஜூன் 2017 (23:30 IST)
எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம் படப்பிடிப்பு, போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து சமீபத்தில் சென்சாருக்கும் சென்று 'யூ' சான்றிதழ் பெற்றது.


 


இந்நிலையில் இந்த படம் கடந்த சில நாட்களாக 'ஜூன் வெளியீடு' என்று விளம்பரப்படுத்தி வந்த நிலையில் இந்த படம் இம்மாதம் 30ஆம் தேதி  வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே ஜூன 23ஆம் தேதி ஜெயம் ரவியின் 'வனமகன்' மற்றும் சிம்புவின் AAA ஆகிய படங்கள் வெளியாகவுள்ள நிலையில் ஒரே வார இடைவெளில் இந்த படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :