ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 22 ஜூன் 2018 (08:48 IST)

ஏம்மா இதுக்கெல்லாமா மா ஆட்டோ டிரைவர காதுலயே சுடுவ

டெல்லியில் பெண் ஒருவர் ஆட்டோ டிரைவர் வழி விடாத காரணத்திற்காக, அவரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி குர்கான் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான கட்டாரி, ரோட்டில் தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு போன் போன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவர், கட்டாரியிடம் வழி விடும்படி கேட்டுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
 
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த பெண், தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கட்டாரியை நோக்கி சுட்டுள்ளார். இதில் கட்டாரியின் காதுப்பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்தவர் அந்த பெண்ணிடம் துப்பாக்கியை பறித்து, பின் காவல் துறையினருக்கு புகார் அளித்தார்.
 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் அந்த பெண்ணை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த கட்டாரி மருத்துவமையில் சிகிச்சை பெற்று வருகிறார்.