திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 24 செப்டம்பர் 2018 (14:36 IST)

இளம்பெண்ணின் மர்ம உறுப்பில் மிளகாய் பொடி தூவி அட்டூழியம்

அசாமில் இளம்பெண் ஒருவர் பிளாக்கில் சரக்கு விற்றதாகக் கூறி அந்த பகுதி மக்கள் பெண்ணை நிர்வாணப் படுத்தி, அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் மிளகாய்ப் பொடியை தூவியுள்ளனர்.
அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் இளம்பெண் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதனை முழுவதுமாக விசாரிக்காத அப்பகுதிமக்கள் கும்பலாய் அந்த பெண்ணின் குடியிருப்புக்கு சென்று அப்பெண்ணை கடுமையாக தாக்கினர்.
 
கொடூரத்தின் உச்சமாய் அந்த பெண்ணை நிர்வாணப்படுத்தி அப்பெண்ணின் பிறப்புறுப்பில் மிளகாய்ப் பொடியை தூவி, பெண்ணை தரதரவென ரோட்டில் இழுத்துச் சென்றுள்ளனர்.
 
இதுகுறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண் அளித்த புகாரின்பேரில் போலீஸார் 19 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.