செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (12:54 IST)

லாட்ஜில் வைத்து இளம்பெண்ணை சீரழித்த போலீஸ்காரர்

மும்பையில் இளம்பெண்ணை காவலர் லாட்ஜில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மும்பை போவெய் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் இளம்பெண் ஒருவர் சாக்லெட்டுகளை திருடிய குற்றத்திற்காக அவரை கடை ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
 
அங்கு அந்த இளம்பெண்ணை கண்டித்த கான்ஸ்டபிள் ஆவித் என்பவன், அந்த பெண்ணின் ஆதார் கார்டையும் போன் நம்பரையும் வாங்கிக்கொண்டு பிறகு ஆதார் கார்டை வாங்கிக்கொள்ளுமாறு அந்த பெண்ணை அனுப்பியுள்ளான்.
 
பின்னர் அந்த பெண்ணுக்கு போன் செய்து, வந்து ஆதார் கார்டை வாங்கிக்கொள்ளுமாறு கூறியுள்ளான். அங்கு வந்த அந்த பெண்ணை ஒரு லாட்ஜிற்கு அழைத்து சென்ற ஆவித், அவரை பலவந்தப்படுத்தி கற்பழித்துள்ளான். அதனை வீடியோவாகவும் எடுத்து அந்த பெண்ணை மிரட்டி வந்துள்ளான்..
 
இதுகுறித்து அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவரவே அதிர்ந்துபோன அவர், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் அந்த போலீஸ் ஆவித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.