சாதி பிரச்சனை - உயிரிழந்த மூதாட்டியை தோலில் சுமந்து சென்ற எம்.எல்.ஏ
ஒடிசாவில் சாதி பிரச்சனையால் புறக்கணிக்கப்பட்ட மூதாட்டியின் உடலை எம்.எல்.ஏ ஒருவர் தூக்கிச் சென்று இறுதி சடங்கு செய்தார்.
பல நூறாண்டுகள் ஆனாலும் நம் நாட்டில் ஒழிக்க முடியாத, ஒழிக்கப்படாத ஒன்று சாதிய பாகுபாடு தான். இதனால் மக்கள் பலர் துன்பத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக வடமாநிலங்களில் இந்த பிரச்சனை அதிகமாக இருக்கிறது.
ஒடிசா மாநிலம் அம்னாபாலி என்ற கிராமத்தில் மூதாட்டி ஒருவர் ரோட்டோரமாக உயிரிழந்து கிடந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் கிராமத்தினரிடம் அந்த மூதாட்டியின் உடலை தூக்கி சென்று இறுதி சடங்கு செய்யுமாறு தெரிவித்தனர்.
அந்த கிராம மக்களோ அந்த பெண் எந்த சாதியை சேர்ந்தவர் என்பது எங்களுக்கு தெரியாது. ஆகவே எங்களால் இதனை செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
இதனையறிந்த அப்பகுதி எம்.எல்.ஏ ரமேஷ் பட்வுலா உடனடியாக அவரது உறவினர்களுடன் அந்த இடத்திற்கு சென்று அந்த மூதாட்டியின் உடலை தோளில் சுமந்து சென்று இறுதி சடங்கு செய்து சுடுகாட்டில் தகனம் செய்தனர்.
மக்கள் இப்படி சாதிபாகுபாடு பார்ப்பது வேதனை அளிப்பதாக எம்.எல்.ஏ வருத்தத்துடன் தெரிவித்தார்.