தக்காளி விற்று கோடீஸ்வரரான விவசாயி! மகாராஷ்டிராவில் ஆச்சர்யம்!
நாடு முழுவதும் தக்காளி விலை உயர்வை சந்தித்துள்ள நிலையில் தக்காளி சாகுபடி செய்த விவசாயி கோடீஸ்வரரான சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பல மாநிலங்களில் கனமழை வெள்ளம் காரணமாக விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகளின் விலை அதிகரித்து வருகிறது. முக்கியமாக நாடு முழுவதும் தக்காளி விலை எக்கச்சக்கமாக உயர்ந்துள்ளது.
வட மாநிலங்கள் சிலவற்றில் தக்காளி விலை கிலோ ரூ300 ஐ நெருங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், தக்காளி விற்கவே பவுன்சர், பாடிகார்டு வைத்துக் கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
இந்த சூழலை பயன்படுத்தி தக்காளி விற்று கோடீஸ்வரர் ஆகியுள்ளார் மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாயி துக்காராம். புனே பகுதியை சேர்ந்த துக்காராம் தனது 12 ஏக்கர் பரப்பிளவிலான வயலில் தக்காளி சாகுபடி செய்துள்ளார். தற்போது நாடு முழுவதும் தக்காளி விலை அதிகரித்ததால் ஒரு பெட்டி தக்காளியை ரூ.1000 – ரூ.2500 வரை விற்றுள்ளார். இப்படியாக 13,000 பெட்டி தக்காளியை விற்ற துக்காராம் ரூ.1.5 கோடி வருமானம் ஈட்டி கோடீஸ்வரர் ஆகியுள்ளார். இந்த சம்பவம் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K