வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 4 ஆகஸ்ட் 2018 (16:04 IST)

கேரள முதல்வரை கத்தியால் குத்த முயன்ற நபர் கைது!

கேரள முதல்வர் பினராயி விஜயனை கத்தியால் குத்த முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 
டெல்லியில் நடைபெறும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ கூட்டத்தில் பங்கேற்க கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் டெல்லி சென்றுள்ளார். இன்று காலை 9.30 மணியளவில் அங்கு மர்ம நபர் ஒருவர் கத்தியை கையில் வைத்துக்கொண்டு, பினராயி விஜயன் தன்னை வஞ்சித்துவிட்டதாக கூறி தற்கொலை செய்யப் போவதாக கத்தியுள்ளார்.
 
இதைத்தொடந்து பினராயி விஜயன் பாதுகாவலர்கள் அவரை தடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவர் இரண்டு முறை முதல்வரை சந்தித்தும் அவரது பிரச்சனையை முதல்வர் தீர்க்கவில்லை என்பதும் தெரியவந்தது.
 
மேலும் அந்த நபர் முதல்வர் பினராயி விஜயனை கத்தியால் குத்த வந்ததாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.