திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 3 ஆகஸ்ட் 2018 (13:17 IST)

ஹலோ நான் திருடன் இல்லை, அவசரத்திற்கு பணம் எடுத்திருக்கிறேன் - திருடனின் கடிதம்

கேரளாவில் திருடன் ஒருவன் பணத்தை திருடிவிட்டு, அந்த வீட்டில் நான் திருடன் இல்லை, அவசரத்திற்கு பணம் எடுத்திருக்கிறேன் விரைவில் கொடுத்துவிடுவேன் என எழுதிவிட்டு சென்றுள்ளான்.
கேரளாவில் உடினூர் பகுதியை சேர்ந்த முனீரா என்பவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். சற்று நேரத்தில் வீடு திரும்பிய அவருக்கு பேரதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.
 
வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 2 சவரன் நகையும் 30 ஆயிரம் ரூபாயும் திருடப்பட்டிருந்தது. அத்தோடு பணத்தை திருடிய திருடன் வீட்டின் சுவரில் நான் திருடன் இல்லை, அவசரத்திற்கு பணம் எடுத்திருக்கிறேன் விரைவில் கண்டிப்பாக திருப்பி தந்துவிடுவேன் என எழுதிவிட்டு சென்றுள்ளான்.
 
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் அந்த திருடனை தேடி வருகின்றனர்.
இதேபோல் கேரளாவில் சமீபத்தில் திருடன் ஒருவன் திருடிய நகைகளை மனம்திருந்தி திருடிய நபரிடமே ஒப்படைத்தான்.