செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 30 ஜனவரி 2019 (12:35 IST)

10 நிமிஷம் லேட்: தலாக் சொன்ன கணவன்

உத்திரபிரதேசத்தில் மனைவி தாய் வீட்டிற்கு சென்று 10 நிமிடம் லேட்டாக வந்ததால் கணவன் மனைவிக்கு தலாக் கூறியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இஸ்லாமிய ஆண்கள் தங்கள் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், உடனடியாக மூன்று முறை தலாக் (முத்தலாக்) கூறி விவாகரத்து செய்வது அம்மத வழக்கமாக இருக்கும் நிலையில் முத்தலாக் கூறினால் சிறை தண்டனை அனுபவிக்கக்கூடும் என நீதிமன்ற அதிரடியாக கூறியிருந்தது. ஆனாலும் நீதினம்றத்தின் உத்தரவை மதிக்காத சிலர் இந்த நடவடிக்கையை பின்பற்றி வருகின்றனர்.
 
அப்படி உத்திரபிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் கணவர் வீட்டிலிருந்து தனது தாயை பார்க்க அவர் வீட்டிற்கு சென்றுள்ளார். வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய கணவன், வீட்டில் மனைவி இல்லாததைக் கண்டு அவருக்கு போன் செய்தார். மனைவி தாம் தனது தாய் வீட்டில் இருப்பதாக கூறினார்.
 
இதனால் கோபமடைந்த கணவன் அரை மணிநேரத்திற்குள் வீட்டிற்கு திரும்பவில்லை என்றால் என்ன நடக்கும் என்றே எனக்கு தெரியாது என கூறியுள்ளார். பின்னர் வேகவேகமாக அடித்துபிடித்துக்கொண்டு அவரது மனைவி கணவன் வீட்டிற்கு வந்துள்ளார். ஆனாலும் 10 நிமிடம் லேட்டாயிற்று. உச்சகட்ட கோபத்தில் இருந்த அந்த பெண்ணின் கணவர் அவருக்கு தலாக் கூறிவிட்டார்.
 
இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.