வாட்ஸ் ஆப்பில் உல்லாசம்: கடுப்பான கணவன்; கடைசியில் நேர்ந்த கொடூரம்

Acc
Last Modified வியாழன், 24 ஜனவரி 2019 (10:53 IST)
கன்னியாகுமரியில் மனைவியின் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவன்  கண்டந்துண்டமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரியை சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி சுலோச்சனா. இந்த தம்பதியினருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். ராஜ் மனைவி சுலோச்சனாவிற்கு பக்கத்துவீட்டுக்காரரான ஜெய்சிங் என்பவருடன் தகாத உறவு இருந்ததாக தெரிகிறது. 
 
இந்நிலையில் சமீபத்தில் மனைவியின் செல்போனை பரிசோதித்த ராஜ், அவர் ஜெய்சிங்கிற்கு வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அனுப்புவதை கண்டுபிடித்தார். ஆத்திரமடைந்த அவர் ஜெய்சிங்கின் வீட்டிற்கு சென்று அவரை கண்டித்துள்ளார்.
 
இதனால் ஆத்திரமடைந்த ஜெசிங் ராஜை பழிவாங்க திட்டமிட்டார். அதன்படி தனது கூட்டாளிகளுடன் ராஜ் வீட்டிற்குள் நள்ளிரவில் புகுந்த செய்சிங் அவரின் வாயில் துணியை வைத்து அடைத்து கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர்.
 
கொலையாளிகளை தீவிரமாக தேடி வரும் போலீஸார், ராஜ் மனைவிக்கு இந்த கொலையில் பங்குள்ளதா என்ற கோண்டத்தில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :