வாக்காளர்களை ஊக்கப்படுத்த ராட்சத பலூன்: அசத்தும் தேர்தல் ஆணையம்

Arun Prasath| Last Updated: திங்கள், 21 அக்டோபர் 2019 (09:14 IST)
ஹரியானா மாநிலத்தில் இன்று சட்டமன்ற தேர்தல்நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் வாக்காளர்களை ஊக்கப்படுத்த தேர்தல் ஆணையம் ராட்சத பலூன்களை பறக்கவிட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மற்றூம் ஹரியானா மாநிலங்களில் இன்று சட்டபேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. 90 சட்டபேரவை தொகுதிகள் கொண்ட ஹரியானாவில் மக்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் தேர்தலுக்கான விழிப்புணர்வாக மக்களை ஊக்கப்படுத்தும் வகையில் அம்மாநில தேர்தல் ஆணையம் ராட்சத பலூன் ஒன்றை பறக்கவிட்டுள்ளது. இது அம்மாநில மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :