இந்தியாவில் 100 பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டமா?? உளவுத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Arun Prasath| Last Modified சனி, 19 அக்டோபர் 2019 (17:41 IST)
ஆஃப்கானிஸ்தானிலிருந்து 100 பயங்கரவாதிகளை காஷ்மீருக்குள் அனுப்பி வைக்க பாகிஸ்தான் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை தொடர்ந்து, காஷ்மீரில் பதற்றம் நிலவிவந்தது. மேலும் பாகிஸ்தான் இந்தியாவில் பயங்கரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுறுவ செய்ய திட்டம் தீட்டப்போவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பே, ஆஃப்கானிஸ்தான் எல்லையில், முகாமிட்டுள்ள பயங்கரவாதிகள் 100 பேரை, காஷ்மீருக்குள் ஊடுருவ செய்ய, பாகிஸ்தான் திட்டம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் லிபா என்ற இடத்தில் உள்ள எல்லை கட்டுபாட்டு கோட்டில் 15 ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ தயாராக உள்ளதாகவும் இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :