வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 31 மார்ச் 2018 (13:50 IST)

காவல் நிலையத்தின் மாடியில் அத்துமீறிய வெளிநாட்டு ஜோடியினர்

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காவல் நிலையத்தின் மாடியில் வெளிநாட்டு ஜோடியினர் அத்துமீறிய வீடியோ காட்சி  சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காவல் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. காவல் நிலைய மாடியில் வெளிநாட்டு ஜோடியினர் உல்லாசமாக இருந்துள்ளனர். பட்டப்பகலில் நடந்த அரங்கேற்றத்தை எதிரே உள்ள கட்டிடத்தில் இருந்த யாரோ வீடியோவில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளனர்.
 
இதுகுறித்து உதய்பூர் காவல் நிலைய அதிகாரி கூறும் போது, காவல் நிலையத்தின் மொட்டை மாடிக்கு செல்ல அருகில் உள்ள கோவில் வழியாக வழி உள்ளது. அதன் வழியாகத்தான் வெளிநாட்டு ஜோடி சென்று இருக்கிறது. இது காவல் நிலையத்துக்குள் இருக்கும் போலீசாருக்கு தெரிய வாய்ப்பு இல்லை எனக் கூறினார்.
காவல் துறையினரின் விளக்கத்தை கேட்ட சமூக ஆர்வலர்கள், வெளிநாட்டு ஜோடியினர் அநாகரிகமாக நடந்து கொண்டதை போலீஸார் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு இப்படி மழுப்புகின்றனர் என கண்டனம் தெரிவித்துள்ளனர்.