1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 1 டிசம்பர் 2018 (08:12 IST)

மனைவியை பழிதீர்க்க 3 வயது மகளை கற்பழித்த தந்தை

டெல்லியில் மனைவி மீது உள்ள கோபத்தில் தந்தை 3 வயது குழந்தையை கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் 3 வயது குழந்தையுடன் ஒரு குடியிருப்பில் வசித்து வந்தார். அந்த நபர் மனைவியிடம் அவ்வப்போது சண்டையிடுவார்.
 
அதே போல் நேற்று முன் தினம் தனது மனைவியிடம் அவர் சண்டையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி கோபித்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டார்.
 
மனைவி வெளியே சென்ற ஆத்திரத்தில், அந்த கொடூரன் குடித்துவிட்டு தனது 3 வயது மகளை சீரழித்துள்ளான். சற்று நேரம் கழித்து வீட்டிற்கு வந்த மனைவி குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
 
இதையடுத்து புகாரின்பேரில் அந்த கொடூர அப்பனை கைது செய்த போலீஸார், அவன் மீது போக்ஸோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.