திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 28 நவம்பர் 2018 (08:13 IST)

கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த மகன்: தந்தைக்கு நேர்ந்த கொடூரம்

சென்னை வண்டலூரை சேர்ந்த நபர் ஒருவரின் கள்ளக்காதல் மோகத்தால் அவரது தந்தை கொல்லப்பட்ட  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை வண்டலூரை அடுத்த கண்டிகை, வேங்கடமங்கலத்தைச் சேர்ந்தவர் சையது இஸ்மாயில் (45). தாம்பரத்தில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவரது மகன் அசாருதீன்(24), இவரும் ஆட்டோ ஓட்டுநர்.
 
அசாருதீனுக்கும் கூடுவாஞ்சேரி நாதன் நகரை சேர்ந்த சுரேந்தரின் மனைவி சுமதி (30) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு இருவரும் அவ்வப்போது தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். 
 
இதனையறிந்த சுமதியின் கணவர் சுரேந்தர் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் சுமதி வீட்டில் இருந்து வெளியேறி அசாருதீனுடன் ஓடிவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சுரேந்தர் தனது நண்பருடன் சேர்ந்து  அசாருதினின் தந்தை இஸ்மாயிலிடம் சென்று அசாருதின் எங்கே என கேட்டுள்ளார். இஸ்மயில் அவன் எங்கே போயிருக்கிறான் என்பது குறித்து தமக்கு தெரியாது என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேந்தர், இஸ்மாயிலைக் கொன்று அவரது உடலை குன்றத்தூரில் வீசிவிட்டு சென்றார்.
 
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சுரேந்தரும் அவரது நண்பரும் நீதிமன்றத்தில் சரண்டர் ஆகிவிட்டனர். மகனின் கள்ளக்காதலால் தந்தை கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.