திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 25 ஜூலை 2019 (16:44 IST)

திரைப்பட பாணியில் பல்டி அடிக்கும் கார் – அதிர்ச்சியான வீடியோ

அடைமழை பெய்து கொண்டிருந்த நேரத்தில் அதிவேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தடுப்புக் கட்டைகளில் மோதி பல்டியடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் முழுவதும் மழைநீராக இருப்பதால் வாகனங்கள் மெதுவாக சென்று வருகின்றன. இந்நிலையில் பதான்கோட் பகுதியில் மழை பெய்து கொண்டிருந்த நேரம் அதிவேகமாக வந்த கார் ஒன்று கட்டுபாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதியது.

பிறகு தடுப்புசுவரின் மீது பல்டியடித்தபடியே வந்தது. இதை கண்டு பாதசாரிகள் தெறித்து ஓடினர். ஓரமாக சென்று விழுந்தது கார். யாராவது அடிப்பட்டிருக்கிறார்களா என பார்ப்பதற்காக சில அருகில் சென்றனர். சிறு காயங்களுடன் டிரைவர் கதவை திறந்து கொண்டு வெளியேறினார். அவரை தவிர வேறு யாரும் காரில் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.