வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (12:45 IST)

102 நாட்கள் ஹோட்டலில் தங்கிவிட்டு, பில் கட்டாமல் எஸ்கேப் ஆன தொழிலதிபர்..

தெலுங்கானாவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், 102 நாட்கள் தங்கிவிட்டு பில் கட்டாமல் ஓடிய தொழிலதிபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அமைந்துள்ள தாஜ் பஞ்சாரா நட்சத்திர ஓட்டலில், சமீபத்தில் சங்கர் நாராயணன் எனும் தொழிலதிபர் ஒருவர் தங்கியுள்ளார். மொத்தம் 102 நாட்கள் தங்கிய இவருக்கு, ரூ.25.96 லட்சம் பில் வந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 13.62 லட்சத்தை கட்டிவிட்ட நிலையில், மீதமுள்ள தொகையை பின்னர் தருவதாக கூறியுள்ளார்.

இதன் பின்பு, ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் அந்த ஹோட்டலில் இருந்து தப்பி ஓடியுள்ளார். சங்கரை காணவில்லை என தேடிய ஹோட்டல் நிர்வாகம், அவரது செல்ஃபோன் எண்ணிற்கு தொடர்பு கொண்டனர். ஆனால் அவரது செல்ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்துள்ளது. இதனையடுத்து அந்த ஹோட்டல் நிர்வாகம், போலீஸிடம் புகார் அளித்தனர். அப்புகாரின் அடிப்படையில் தற்போது போலீஸார் சங்கரை தேடிவருகின்றனர்.