Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கேரளாவில் 9 ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம்; 3 கயவர்கள் கைது

bastard
Last Updated: செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (14:03 IST)
கேரளாவில் 9 ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 3 அயோக்கியன்களை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பள்ளி மாணவிகள் மீதான பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் போதிலும் இந்த கொடுமை குறைந்த பாடில்லை
 
கேரளா கோட்டயம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் அதே பகுதியிலுள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். மாணவிக்கு அகில் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான் அகில். பின்பு மாணவியை மிரட்டி அவரிடம் நகை மற்றும் பணத்தை பறித்ததோடு இல்லாமல் தன் நண்பர்களுடன் சேர்ந்து மாணவியை சீரழித்துள்ளான்.
 
இதனையடுத்து அந்த நபரின் தொல்லை அதிகரிக்கவே மாணவி இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தார். காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டு போலீஸார் அந்த மூன்று காமுகன்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
இந்த மனித மிருகங்களை உடனடியாக தூக்கிலிட வேண்டும் என பொதுமக்கள் கூறி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :