மணிப்பூரில் நிலச்சரிவு - இடிபாடுகளில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு

manipur
Last Modified புதன், 11 ஜூலை 2018 (10:46 IST)
மணிப்பூரில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் மண் சரிவு ஏற்பட்டு பல இடங்களில் முழுவதுமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். பலர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில், தாமங்லாங் மாவட்டம் நியூசெலம் கிராமத்தில் இன்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மலையடிவாரத்தில் இருந்த வீடுகள் இடிபாடுகளில் சிக்கினர். இந்த கோர விபத்தில் 9 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த இடன்ஙளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :