அண்ணன் இறந்த செய்தியைக் கேட்ட தங்கை பரிதாப மரணம்

sister
Last Modified புதன், 11 ஜூலை 2018 (08:11 IST)
தூத்துக்குடியில் அண்ணன் தற்கொலை செய்துகொண்ட தகவலைக் கேட்ட தங்கை அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்தவர் திருப்பதி. கிராம நிர்மாக அலுவலரான இவர், மதுபோதைக்கு ஆளாகி சரியாக வேலைக்கு செல்லாததால் இவர் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இவருக்கு இரண்டு தங்கைகள் உண்டு. திருப்பதிக்கு தங்கைகள் மீது அதீத பாசம்.
 
இந்நிலையில் வேலையை இழந்து தவித்த திருப்பதி, துக்கத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் அவரது தங்கைக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தங்கை மயங்கி விழுந்து சம்பவ இடத்திலே பலியானார்.
 
இருவரது உடலும் ஒரே நேரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அண்ணன் தங்கை ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :