வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 29 அக்டோபர் 2018 (11:28 IST)

இரும்பு ராடால் ஆசிரியரை தாக்கிய 8ஆம் வகுப்பு மாணவன்...என்ன காரணம்?

ஏண்டா ஸ்கூலுக்கு ஒழுங்கா வரமாட்டிங்கிறன்னு கேட்ட ஆசிரியரை 8ஆம் மாணவன் இரும்பு ராடால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
டெல்லியில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளி ஒன்றில் மாணவன் ஒருவன் 8ஆம் வகுப்பு படித்து வருகிறான். அவன் அவ்வப்போது ஸ்கூலுக்கு கட் அடித்து ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்துள்ளான்.
 
இந்நிலையில் நீண்ட நாள் கழித்து அந்த மாணவன் பள்ளிக்கு சென்றுள்ளான். அப்போது ஆசிரியர் ஒருவர் அந்த மாணவனிடம் ஏன் இவ்வளவு நாள் லீவ் எடுத்தாய் என கேட்டு அந்த மாணவனை கண்டித்துள்ளார்.
 
இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன் தன் பையில் வைத்திருந்த இரும்பு ராடால் ஆசிரியரை சரமாரியாக தாக்கியுள்ளான். உடனடியாக சக மாணவர்கள் அந்த மாணவனை தடுத்து நிறுத்தினர். படுகாயமடைந்த ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இதுகுறித்து பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் அந்த மாணவனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவன் ஆசிரியரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.