1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 14 ஏப்ரல் 2018 (18:29 IST)

ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிந்த 80 ஆயிரம் பேராசிரியர்கள் கண்டுபிடிக்கபப்ட்டது எப்படி தெரியுமா?

நாடு முழுவதும் சுமார் 80 ஆயிரம் பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிந்துள்ளனர். அதுவும் இவர்கள் அனைவரும் முழுநேர பேராசிரியர்களாக இரண்டு கல்லூரிகளில் பணிபுரிந்துள்ளது பெரும் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயம் ஆதார் அட்டை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்



நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் முறைகேடுகளை தடுக்க பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இந்த ஆதார் எண்களில் இருந்து ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 80 ஆயிரம் பேராசிரியர்கள் பணிபுரிந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தங்களுக்கு பதில் வேறு நபர்களை வேலைக்கு அனுப்பியும், மாறி மாறி விடுமுறை போட்டும் இந்த பேராசிரியர்கள் இரண்டு கல்லூரிகளில் பணிபுரிந்துள்ளனர். இந்த மோசடி தற்போது ஆதார் அட்டை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.