வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 22 ஆகஸ்ட் 2018 (07:09 IST)

ஒரே நாளில் 7 மாநில கவர்னர்கள் மாற்றம்: ஜனாதிபதி அறிவிப்பால் பரபரப்பு

பாராளுமன்ற தேர்தல் இன்னும் ஒருசில மாதங்களில் நடைபெறவிருக்கும் நிலையில், ஒரே நேரத்தில், 7 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதனால்  தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பின்படி ஜம்மு- காஷ்மீர் மாநில ஆளுநராக சத்யபால் மாலிக் அவர்களும்  பீகார் மாநில ஆளுனராக லால்ஜி டான்டன் அவர்களும், சிக்கிம் மாநில கவர்னராக கங்கா பிரசாத் அவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
 
மேலும் மேகாலயா ஆளுநராக ததகட்டா ராய்யும், திரிபுரா மாநில ஆளுநராக கே.எஸ். சோலங்கியும்,  ஹரியானா மாநில ஆளுநராக சத்யதேவ் நாராயண் ஆர்யாவும்,  உத்தரகாண்ட் மாநில ஆளுநராக பேபி ராணி மவுரியாவும்  நியமிக்கப்பட்டுள்ளனர்.