திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 26 செப்டம்பர் 2019 (18:26 IST)

கனமழையால் தத்தளிக்கும் புனே..

புனே நகரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் பெய்து வரும் கனமழையால், புராந்தர், பராமதி, போர், மற்றும் ஹாவேலி பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் சாலைகளில் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து புனேவின் சின்ஹாகட் சாலையில் இருந்த கார் ஒன்றிலிருந்து ஒரு உடல் மீட்கப்பட்டுள்ளது.

இதே போல் அனேஷ்வர் என்ற பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒன்பது வயது சிறுவன் உட்பட 5 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வரை பூனேவில் பெய்த கனமழையால் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.