செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 19 ஜனவரி 2021 (11:35 IST)

முதல்வர் சென்ற விமானத்தில் இருந்து தாயும் குழந்தையும் இறக்கி விடப்பட்டனரா? விளக்கம் அளித்த அலுவலகம்!

கோப்புப் படம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லிக்கு விமானம் மூலம் சென்றார்.

சென்னையில் இருந்து பிரதமர் மோடியை சந்திப்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு நேற்று மதியம் விமானம் மூலமாக சென்றார்.அப்போது அந்த விமானத்தில் இருந்த குழந்தை ஒன்று விடாமல் அழுது கொண்டிருந்ததால் அந்த குழந்தையால் மற்ற பயணிகளுக்கு அசௌகர்யமாக இருக்கும் என்பதால் விமானத்தில் இருந்து தாயும் அந்த குழந்தையும் இறக்கிவிடப்பட்டுள்ளனர். அதன் பிறகு அந்த விமானம் கிளம்பியுள்ளது.

இந்நிலையில் முதல்வர் அந்த விமானத்தில் ஏறுவதற்கு 15 நிமிடம் முன்னதாகவே இந்த நிகழ்வு நடந்ததாக முதல்வர் அலுவலகம் கூறியுள்ளது.