செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 18 ஜனவரி 2021 (14:32 IST)

ஈபிஎஸ் டெல்லி செல்வது ஏன்? ரத்தன் சுறுக்கமாய் சொன்ன ஜெயகுமார்!

எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்வது ஏன் என அமைச்சர் ஜெயகுமார் விளக்கம். 

 
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லிக்கு செல்கிறார். காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் குறித்து பிரதமரிடம் பேச இருக்கும் எடப்பாடியார், அதிமுக - பாஜக கூட்டணியையும் உறுதி செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
தேர்தல் நெருங்கும் வேளையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் முதல்வரின் டெல்லி பயணத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதல்வர் பழனிசாமி சந்திக்கிறார். அமித்ஷாவுடனான சந்திப்பில் பாஜகவுக்கான தொகுதிகள், கூட்டணியில் பிறகட்சிகள் குறித்து இறுதியாக வாய்ப்பு என தெரிகிறது. 
 
இந்நிலையில் முதல்வருடன் டெல்லி செல்லும் அமைச்சர் ஜெயகுமார், சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் முன், மாநிலத்தின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடியை முதலமைச்சர் சந்திக்க உள்ளார் என செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.