Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

4 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் திடீர் மாயம்: கர்நாடகாவில் பரபரப்பு

Last Modified புதன், 16 மே 2018 (09:20 IST)
கர்நாடக மாநில தேர்தல் முடிவு எந்த கட்சிக்கும் சாதகமாக வரவில்லை என்பதால் அங்கு ஆட்சியமைப்பது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. தனிப்பெரும் கட்சியாக 104 இடங்களை கைப்பற்றியுள்ள பாஜகவுக்கு கவர்னர் அழைப்பு விடுப்பாரா? அல்லது மெஜாரிட்டி உள்ள காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு கவர்னர் அழைப்பு விடுப்பாரா? என்பது இன்னும் ஒருசில நிமிடங்களில் தெரிந்துவிடும்
இந்த நிலையில் அடுத்த ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்த பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சியின் புதிய எம்எல்ஏக்கள் கூட்டம் சற்றுமுன் தொடங்கியது. ஆனால் இந்த கூட்டத்தில் வெற்றி பெற்ற 4 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை என்றும், அந்த 4 எம்எல்ஏக்களையும் மொபைல்போன் மூலமும் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் காங்கிரஸ் தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது. அதற்குள் குதிரைபேரம் தொடங்கிவிட்டதா? என்ற அச்சமும் காங்கிரஸ் கட்சியில் நிலவி வருகிறது
இந்த நிலையில் பாஜக ஆட்சி அமைக்க எடியூரப்பாவுக்கு கவர்னர் அழைப்பு விடுக்கவுள்ளதாகவும், அவர் தனது ஆட்சியின் மெஜாரிட்டியை நிரூபிக்க 7 நாட்கள் அவகாசம் அளிக்கவுள்ளதாகவும் செய்திகள் கசிந்து வருகிறது. இந்த செய்தி உண்மையா? என்பது இன்னும் ஒருசில நிமிடங்களில் தெரிந்துவிடும்இதில் மேலும் படிக்கவும் :