வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 2 ஜனவரி 2018 (07:50 IST)

37 மணி நேர என்கவுண்டர் நிறைவு : 5 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம்

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும்- சி.ஆர்.பி.எப்(CRPF) படையினருக்கும் இடையே நடந்த 37 மணி நேர துப்பாக்கிச் சண்டை நேற்று முடிவுக்கு வந்தது. இதில் 5 சி.ஆர்.பி.எப். வீரரகள் வீரமரணம் அடைந்தனர்.
அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கில் லஷ்கரே தொய்பா பயங்கரவாதிகள் கடந்த ஞாயிறன்று அதிக்காலை காஷ்மீரின் தெற்கு பகுதியான புல்வாமா மாவட்டம் லித்தாபோரா என்ற பகுதியில் உள்ள சி.ஆர்.பி.எப் முகாம் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். இதனை எதிர்பாராத சி.அர்.பி.எப் வீரர்கள், உடனடியாக சுதாரித்துக்கொண்டு எதிர் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிலும் பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. 37 மணி நேரம் நீடித்த இந்த சண்டை நேற்று இரவு முடிவுக்கு வந்தது. இந்த தாக்குதலில் 5 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணமடைந்தனர். 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
 
இது குறித்து சி.ஆர்.பி.எப் ஐ.ஜி.ரவிதீப் ஷகாய் கூறுகையில், தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்கு பழிவாங்கவே இத்தாக்குதலை நடத்தினோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது என்றார். இதனையடுத்து புல்வாமா பகுதியில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.