திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 11 மார்ச் 2023 (14:10 IST)

ஜப்பானிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேர் கைது

holi
நாட்டின் தலைநகர் டெல்லியின் ஹோலி பண்டிகையின் போது, ஜப்பானியபெண் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சிறுவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

டெல்லியில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின்போது, ஜப்பானிய பெண் ஒருவரை சூழ்ந்துகொண்டு, இளைஞர்கள் சிலர் துன்புறுத்தினர். இந்த வீடியோ  சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, போலீஸார் கூறியதாவது:  ‘அந்தப்பெண் ஜப்பானில் இருந்து இந்தியாவுக்கு வந்த சுற்றுலாப் பயணி ஆவார். அவர், தேசிய தலைநகரில் உள்ள பஹர்கஞ்சில் தங்கியிருந்த நிலையில் தற்போது வங்கதேசம் சென்றுவிட்டார்.

ஜப்பானிய பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக ஒரு சிறுவன் உட்பட 3 சிறுவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட சிறுவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்’ எனத் தெரிவித்தனர்.

துணை கவிஷனர் சஞ்சய் குமார், ‘இந்த சம்பவம் தொடர்பாக வெளிநாட்டவரிடம் இருந்து எந்த ஒரு புகாரும் காவல் நிலையத்தில் பெறப்படவில்லை. ஆயினும் சிறுமியைப் பற்றி அடையாளம் அல்லது வேறு விவரங்கள் அனுப்பும்படி ஜப்பானிய தூதரகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருப்பதாகவும்’ தெரிவித்துள்ளார்.