திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 10 மார்ச் 2023 (19:54 IST)

'ஓயோ' நிறுவனர் ரித்தேஷ் அகர்வாலின் தந்தை மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு

ramesh agarwal
ஹரியானா மாநிலம் குர்கானில்  ஓயோ நிறுவனர் ரித்தேஷ் அகர்வாலின் தந்தை இன்று மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.

ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், ஓயோ நிறுவனர் ரமேஷ் அகர்வால்  தன் மனைவியுடன் வசித்து வந்தார்.

இந்தக் கட்டிடத்தின் 20 வது மாடியில் இருந்து இன்று ரகேஷ் அகர்வால்  விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தத் தகவலை  ஓயோவின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். ரித்தேஷ் அகர்வாலும் தன் தந்தை இறந்துவிட்டதாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

'எங்கள் குடும்பத்தின் வழிகாட்டும் ஒளியும் வலிமையுமான என் தந்தை ரமேஷ் அகர்வால் இன்று காலமானர்' என்று கூறியுள்ளார்.

ரமேஷ் அகர்வாலில் மறைவுக்கு தொழிலதிபர்கள், அமைச்சர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ரமேஷ் அகர்வாலில் இறப்பு குறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.