1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 15 ஏப்ரல் 2023 (19:44 IST)

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் உயிரிழப்பு...

பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் அமலில் உள்ள நிலையில், கள்ளச்சாராயம் குடித்த 20 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஸ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஸ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இம்மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், கிழக்கு சம்பரன் மாவட்டம் துருகுலியா மற்றும் பஹர்பூர் கிராமத்தைச் சேர்ந்த சிலர் கள்ளச்சாராயம் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் இன்று 4 பேர் உயிரிழ்ந்துள்ளனர். மேலும், சிலர் ஆபத்தான நிலையில்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தவர்கள் பற்றி விசாரித்து வருகின்றனர்.