வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 12 ஏப்ரல் 2023 (16:57 IST)

‘’நாட்டிற்காக ஒற்றுமையாக போராடுவோம்’- முதல்வர் நிதிஸ்குமாரை சந்தித்த பின் ராகுல் காந்தி பேட்டி

பீகார் முதல்வர் நிதிஸ்குமார் மற்றும் துணை முதல்வர்  தேஜஸ்வியை சந்திந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி,  ‘’நாட்டிற்காக ஒற்றுமையாக போராடுவோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரவுள்ளது.  இதில், இரண்டுமுறை தொடர்ந்து வெற்றி பெற்ற  பாஜக கூட்டணிக்கு எதிராக ஒரு மெகா கூட்டணியை எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக திட்டமிட்டுள்ளனர்

இந்த  நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று டெல்லி சென்றிருந்தார்.  அவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி  உள்பட பல தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒரே கூட்டணியில் வலுவாக தேர்தலில் போட்டியிட அவர் விரும்பம் தெரிவித்துள்ளளார்.

முதல்வர்  நிதிஸ்குமார்,  ஏற்கனவே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி ராஜா உள்பட பல தேசிய தலைவர்களை சந்தித்து பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சந்திப்பிற்குப் பின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி,’’ இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு சந்திப்பு நடத்தியுள்ளோம். இதில், பல விஷயங்கள் பற்றி கலந்துரையாடினோம்.அதன்படி, அனைத்து எதிர்க்கட்சிகளையும்  ஒன்றிணைத்து வரும் பாராளுமன்றத் தேர்தலில்   ஒற்றுமையுடன் போராட முடிவெடுத்துள்ளதாகக் ‘’கூறினார்.