செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash

இந்திய - சீன எல்லை தாக்குதல்: 4 ராணுவ வீரர்கள் கவலைக்கிடம்...!

லடாக் எல்லையில் சீனாவுடனான மோதலில் காயமடைந்த மேலும் 4 இந்திய ராணுவ வீரர்கள் கவலைக்கிடம் என தகவல். 
 
லடாக் எல்லையில் இந்திய - சீன வீரர்கள் இடையே நடந்த தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும் 2 ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்தனர். இந்த மூவரில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மூவர் பலி எண்ணிய நிலையில் லடாக் எல்லையில் இந்திய சீன படைகள் இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்களும், 43 சீன வீரர்களும் உயிரிழந்ததாக வெளியான தகவல் இரு நாடுகளை மட்டுமின்றி உலக நாடுகளையே பதட்டத்தில் ஏற்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், லடாக் எல்லையில் சீனாவுடனான மோதலில் காயமடைந்த மேலும் 4 இந்திய ராணுவ வீரர்கள் கவலைக்கிடம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.