புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 8 மார்ச் 2023 (09:53 IST)

நண்பர்களுடன் கபடி விளையாடியபோது மாரடைப்பு.. 19 வயது வாலிபர் பரிதாப மரணம்..!

நண்பர்களுடன் கபடி விளையாடிக் கொண்டிருந்த 19 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீசத்யசாய் என்ற மாவட்டத்தில் 19 வயது இளைஞர் ஒருவர் கபடி விளையாடிக் கொண்டிருந்தார். அவர் இளங்கலை பார்மசி படித்துக் கொண்டிருந்தார் என்றும் ஓய்வு நேரத்தில் கபடி விளையாடிக் கொண்டிருந்தார் என்றும் தெரிகிறது.
 
இந்த நிலையில் கபடி விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சையின் பலன் இன்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. 
 
கடந்த சில வருடங்களாக இளைஞர்களுக்கு மாரடைப்பு நோய் வந்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னால் தமிழகத்தில் கபடி வீரர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva