1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 22 மார்ச் 2020 (15:52 IST)

மார்ச் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: மேற்கு வங்க அரசு அறிவிப்பு

மார்ச் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: மேற்கு வங்க அரசு அறிவிப்பு
கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க பிரதமர் நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோளின்படி இன்று காலை 7 மணி முதல் மக்கள் சுய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது என்பதும், இந்த ஊரடங்கு உத்தரவு இன்று இரவு 9 மணிக்கு முடியும் என்பதும் தெரிந்ததே.
 
ஆனாலும், தமிழகம் மகாராஷ்டிரம் உள்பட ஒருசில மாநிலங்களில் இந்த ஊரடங்கு உத்தரவு நாளை வரை நீடிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பீகார், ராஜஸ்தான், புதுவை போன்ற மாநிலங்களில் மார்ச் 31 வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தா மற்றும் 125 நகரங்களில் வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக மேற்குவங்க அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் மேற்கு வங்க மாநில மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர் 
 
இருப்பினும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனையாகும் கடைகள் மட்டும் திறந்து இருக்கும் என்றும் அத்தியாவசிய பயணங்கள் அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பால், மருந்து பொருட்கள், கேஸ் போன்ற கடைகள் திறந்திருக்க எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்றும் அதே போல் மருத்துவமனைக்கு செல்பவர்களுக்கு சாலையில் செல்ல அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேற்கு வங்க மாநிலம் எடுத்த இந்த அதிரடி அறிவிப்பை இந்தியா முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் மக்களை தனிமைப்படுத்தி வீட்டுக்குள்ளேயே இருக்க வைப்பது ஒன்று தான் இப்போதைக்கு ஒரே வழி என்று சமூக ஆர்வலர்கள் மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது