திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 22 மார்ச் 2020 (07:34 IST)

தொடங்கியது மக்கள் சுய ஊரடங்கு: வெறிச்சொடிய சாலைகள்

தொடங்கியது மக்கள் சுய ஊரடங்கு
பாரத பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று இன்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கும் நேரம் சற்றுமுன் தொடங்கியது
 
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவுவதை தடுக்கும் வகையில் இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரதமர் மோடி கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து இந்த மக்கள் சுய ஊரடங்கு உத்தரவு சற்றுமுன் தொடங்கியது 
 
தமிழகம் உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சாலைகள் வெறிச்சோடி உள்ளன. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்பதால் எந்த சாலையிலும் ஆள் நடமாட்டம் இல்லை. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்பட அனைத்து இடங்களும் காலியாக உள்ளது 
 
மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை அடுத்து பால் மருந்து பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் திறக்கப்பட்டு உள்ளது என்பதும் மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று காலை 7 மணி முதல் ஆட்டோ, கால் டாக்ஸி என அனைத்து போக்குவரத்து வாகனங்களும் இயங்கவில்லை