திருமண விழாவில் உணவு சாப்பிட்ட 100 பேருக்கு வாந்தி மயக்கம்
பீகாரில் திருமண விழாவில் சாப்பிட்ட 100 பேர் வாந்தி மயக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் நேற்று திருமண விழா ஒன்று நடைபெற்றது. இந்த திருமண விழாவில் பலர் கலந்து கொண்டு உணவருந்தினர்.
இந்நிலையில் திருமண விழாவில் சாப்பிட்ட, 100 பேருக்கு, வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீசார், திருமண விருந்தில் பரிமாறப்பட்ட உணவு, சமைக்கப்பட்டு வெகுநேரம் ஆனதால், சாப்பிட்டவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.