சபரிமலை சென்ற பெண்கள் தடுத்து நிறுத்தம்!
சபரிமலைக்கு செல்ல முயன்ற 10 பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலையில் மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக இன்று நடை திறக்கப்படுகிறது. சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகாத நிலையில், தீர்ப்பு வெளியாகும் வரை பெண்களை அனுமதிப்பது இல்லை என கேரள அரசு முடிவெடுத்துள்ளது.
பெண்ணுரிமை ஆர்வலர் திருப்தி தேசாய் உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்ட பெண்கள் சபரிமலைக்கு செல்ல ஆன்லைனில் விண்ணப்பித்து உள்ளனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி தரப்படாது என அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று சபரிமலைக்குள் அனுமதி இல்லாமல் நுழைந்த 10 பெண்களை போலீஸார் பிடித்து திரும்ப அனுப்பியுள்ளனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.