கொரோனா தடுப்பூசியால் இரு நிறுவனங்களுக்கு 1.11 லட்சம் கோடி லாபம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு
கொரோனா வைரஸ் தடுப்பூசிகளால் இரண்டு நிறுவனங்களுக்கு மட்டும் ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி லாபம் என காங்கிரஸ் திடீரென குற்றச்சாட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 3.54 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவில் இருந்து பொதுமக்களை காப்பாற்றுவதற்காக இரண்டு தடுப்பூசிகள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த தடுப்பூசிகள் அனைத்து மக்களுக்கும் தற்போது போடப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு மீது காங்கிரஸ் இதுகுறித்து பகீர் குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியுள்ளது. மத்திய அரசின் தவறான தடுப்பூசி கொள்கையால் இரு நிறுவனங்களுக்கு மிகக் குறுகிய காலத்தில் ரூபாய் ஓரு லட்சத்து 11 ஆயிரம் கோடி லாபம் பார்க்க வழி வகுத்துள்ளது என்று கூறியுள்ளது. மேலும் தடுப்பூசி போடுவது மக்கள் சேவை ஆகும் என்றும் மக்கள் பேரழிவில் இருக்கும்போது ஒருபோதும் லாபத்திற்காக காரணமாக இதனை பார்க்க கூடாது என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது