1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Caston
Last Updated : வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (17:58 IST)

மனிதன் - திரைவிமர்சனம்

உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பிலும், நடிப்பிலும் வெளிவந்திருக்கும் படம் மனிதன். பாலிவுட்டில் பெரும் வெற்றி பெற்ற ஜாலி எல்.எல்.பி திரைப்படத்தின் மறுபதிப்பு தான் இந்த மனிதன் திரைப்படம். இந்த படத்தை ஐ அஹமது இயக்கியுள்ளார்.


 
 
ஜாலி எல்.எல்.பி படத்தின் மறுபதிப்பே இந்த படம் என்றதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு வழக்கத்தை விட அதிகமானது. ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்திற்கு பின் பெரிய அளவில் வெற்றி பெறாத உதயநிதி மனிதன் படத்தின் மூலம் உச்சம் தொட்டியுள்ளார்.

பொதுவாக உதயநிதியிடம் நடிப்பு அவ்வளவு இருக்காது என்ற பேச்சு நிலவி வந்தது. தன் மீது கூறப்பட்ட இந்த குறையை மனிதன் படத்தின் மூலம் உடைத்தெரிந்துள்ளார். தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் உதயநிதி தான் ஒரு நடிகன் என்பதை நிரூபித்துள்ளார்.
 
வக்கீல் தொழில் செய்து வரும் உதயநிதி அப்பாவி வக்கீலாக இருக்கிறார். இதனால் அனைவராலும் கிண்டல் செய்யப்படுகிறார். வக்கீலாக சாதித்து தன்னுடைய மாமன் மகளான ஹன்சிகாவை திருமணம் செய்ய வேண்டும் என சென்னைக்கு வருகிறார் உதயநிதி.
 
வக்கீலாக சாதித்து தன்னுடைய மாமனிடம் பொண்ணு கேட்க வேண்டும் என்ற லட்சியத்துடன் சென்னை வரும் உதயநிதி ஸ்டாலின் ஒரு முக்கியமான வழக்கில் முன்வந்து ஆஜராகிறார். பெரிய இடத்து பணக்கார இளைஞன் ஒருவன் நடைபாதையில் தூங்கும் மக்கள் மீது காரை ஏற்றி கொலை செய்து விடுகிறான். இந்த வழக்கில் கார் ஏற்றிய பணக்கார இளைஞன் தரப்பில் இந்தியாவின் மூத்த வழக்கறிஞரான பிரகாஷ் ராஜ் ஆஜராகிறார். அவரை எதிர்த்து ஆஜராகிறார் உதயநிதி ஸ்டாலின்.
 
பரபரப்பான இந்த வழக்கில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றாரா? ஹன்சிகாவை கரம் பிடித்தாரா என்பதே படத்தின் மீதிக்கதை. வக்கீலாக வரும் பிராகாஷ் ராஜ், நீதிபதியாக வரும் ராதரவி ஆகியோரின் நடிப்பு படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பிராகாஷ் ராஜின் அதட்டலான நடிப்பு அப்ளாஸ்.
 
படத்தில் அனைத்து கதாபாத்திரமும் சிறப்பாக நடித்திருப்பது இயக்குனரின் பலம். நீதிமன்ற காட்சிகளை அருமையாக அமைத்திருக்கிறார் இயக்குனர். அதை அருமையாக கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மதி. சந்தோஷ் நாராயணன் இசை படத்திற்கு சிறப்பாக அமைந்துள்ளது.
 
பிரகாஷ் ராஜ், ராதாரவி போன்றாரின் நடிப்பு படத்திற்கு வலு சேர்க்கிறது. கிளைமேக்ஸ் காட்சிகளில் வரும் வசனங்கள் ரசிக்க வைக்கிறது. ரீமேக் படம் என்றாலும் படத்தின் முதல் பாதியை கொஞ்சம் வேகமாக நகர்த்தியிருக்கலாம். இரண்டாம் பாதி பிரகாஷ் ராஜ், ராதாரவியால் வேகம் பெறுகிறது.
 
 
மொத்தத்தில் மனிதன் வென்றுவிட்டான்!